தே.மு.தி.க. முன்னாள் மாவட்ட செயலாளர், ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
தே.மு.தி.க.வின் முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார், ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
தே.மு.தி.க.வின் முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார், ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
தே.மு.தி.க. பிரமுகர்
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. முன்னாள் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர். செல்வகுமார், தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அவருடன் தே.மு.தி.க. நிர்வாகிகள், வடக்கு மாவட்ட துணைச்செயலாளர்கள் சின்னச்சாமி, இளமி நாச்சியம்மாள், மேரி ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் விஜயராஜா, ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்அப்துல்லா, ராஜா, அண்ணாநகர் பகுதி அவைத்தலைவர்கள் கவிஞர் மணிகண்டன், ரஹமத் பீவி, பகுதி துணைச்செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா ரூபி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, மாணவரணி துணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்ட ஆதரவாளர்களும், அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க., 30-வது வட்டக்கழக செயலாளர் பார்மசி கண்ணன் மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச்செயலாளர் குறிஞ்சி குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.
நலத்திட்ட உதவிகள்
வி.பி.ஆர். செல்வகுமார் 2002-ம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சமூக சேவைகளை செய்து பல விருதுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளனர். 2007-ம் ஆண்டு தே.மு.தி.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு கடும் உழைப்பால் வடக்கு மாவட்ட செயலாளராக உயர்ந்தார்.
ெகாரோனா காலக்கட்டத்திலும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் 2022-ம் ஆண்டு கட்சியில் இருந்து விலகி கொண்டார். 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் மதுரை மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்று முதியோர்,மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவராக உள்ளார்.