தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-07-28 00:51 IST

நெல்லை மாவட்ட தே.மு.தி.க.வினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் பிரசன்னா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கையும், சரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்தும், மின் கட்டணம் உயர்வு, பால் பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட அவை தலைவர்கள் மாடசாமி, சங்கர், மாவட்ட நிர்வாகிகள் செல்லத்துரை, முருகன், மாரியப்பன், ஆல்வின்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்