விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசுகளை வெடிப்பதில்விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசுகளை வெடிப்பதில் விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை் எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Update: 2022-10-22 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுவதற்கு காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் உச்சநீதிமன்ற ஆணையின்படி பட்டாசுகளை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கவும், தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் சமூகவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த 17 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை மற்றும் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்வதை தடுக்கவும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 17 நான்கு சக்கர வாகன ரோந்து மற்றும் 25 இருசக்கர வாகன ரோந்துகள் அமைக்கப்பட்டுள்ளது.


வட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் 103 துணை பகுதிகளாக பிரித்து காவல்துறையினர் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்பணியில் 1,400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வாகனங்களால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார், 10 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு விபத்து ஏற்படாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்