தீபாவளி பண்டிகை: அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

Update: 2023-10-11 05:23 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வோருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

விரைவு பஸ்களை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில் நவம்பர் 10-ந்தேதி பயணம் மேற்கொள்வோர் இன்று (புதன்கிழமை) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்வோருக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்