தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு முக்கிய இடங்களில் தீவிர சோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீசார், பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு முக்கிய இடங்களில் தீவிர சோதனையும் செய்து வருகின்றனர்.;

Update:2022-10-24 00:15 IST


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய 4 உட்கோட்டங்களிலும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் தணிக்கை செய்தும் சந்தேக நபர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா? என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

தீவிர சோதனை

மேலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களிலும் வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்