நாமக்கல்லில் தீபாவளி பண்டிகை களைகட்டியது
நாமக்கல்லில் தீபாவளி பண்டிகை களைகட்டியது. கடை வீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாமக்கல்லில் தீபாவளி பண்டிகை களைகட்டியது. கடை வீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று ஜவுளி, பட்டாசு போன்ற பொருட்களின் இறுதிகட்ட வியாபாரம் அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடந்தது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நகைகள், ஜவுளி மற்றும் பட்டாசு வாங்க நாமக்கல்லுக்கு திரண்டு வந்ததால் கடைவீதி, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பட்டாசு கடைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் திருடர்கள் நடமாட்டம் உள்ளதா? எனவும் போலீசார் கண்காணிப்பு கேமரா மற்றும் தற்காலிக கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூட்டம்
இதுதவிர வெளியிடங்களில் இருந்து நாமக்கல்லில் தங்கி பணியாற்றி வந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று தங்கள் ஊருக்கு புறப்பட்டதால் பஸ்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மழை இல்லாததால் வியாபாரிகள் நிம்மதி அடைந்தனர்