சசிகலாவுடன், இணைந்த திவாகரன் கட்சி...!

சசிகலாவின் கட்சியுடன், திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-12 07:30 GMT

சென்னை,

அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில் சசிகலாவின் அண்ணன் திவாகரன் தனது அண்ணா திராவிட கழகத்தை சசிகலாவுடன் இணைப்பதாக நேற்று அறிவித்தார்.

அதன்படி, திவாகரனின் கட்சி இணைப்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலாவின் கட்சியுடன், திவாகரன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைத்து கொண்டார். மேடையில் சசிகலாவுக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலா முன்னிலையில் மேடையில் பேசும்போது திவாகரன் கண்ணீர் சிந்தினார்.

சசிகலாவுக்கு அனைவரும் உதவி செய்யக்கூடிய கட்டாயத்தில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதிலிருந்து 2500 க்கும் மேற்பட்ட இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவோடு இணைய உள்ளனர் என்று திவாகரன் கூறியியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்