தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Update: 2024-07-13 11:10 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதாவது, திருவள்ளூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்