கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்ட இடத்தை மாவட்ட செயலாளர் ஆய்வு

கடையம் அருகே கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்ட இடத்தை மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-30 20:09 GMT

கடையம்:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடையத்தில் வருகிற 9-ந்தேதி மாபெரும் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு கடையத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. கடையத்தில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 3 ஆயிரம் பேருக்கு இஸ்திரி பெட்டி, தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, மகளிருக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்க உள்ளார்" என்றார்.

தொடர்ந்து மேடை அமைப்பதற்காக அளவீடுகள் செய்யப்பட்டன. இந்த ஆய்வின்போது கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்