பகுதிநேர ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

வலங்கைமானில் பகுதிநேர ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-24 18:45 GMT

வலங்கைமான்:

வலங்கைமானில் உள்ள பகுதிநேர ரேஷன் கடைகளில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக கருப்பூர் ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வலங்கைமான் பகுதிகளில் உள்ள 5 ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும் பொருளின் அளவு, கொள்முதல், இருப்பு, விற்பனை குறித்த ஆவணங்களையும், அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் முறைகளையும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன், மண்டல தலைமையிடத்து துணை தாசில்தார் ஆனந்தன் மற்றும் வருவாய்த் துறையினர், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்