ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடம் கட்டும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடம் கட்டும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-29 18:11 GMT

ஜோலார்பேட்டை

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடம் கட்டும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பனந்தோப்பு பகுதியில் புதிதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அலுவலகம் கட்ட தேவையான இடம் உள்ளதா? என நில அளவரிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, தலைமை நில அளவர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்