வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தினார். பின்னர் அவர், கலெக்டருடன் சென்று பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தையும், பெரம்பலூர் ஆதிதிராவிடர் நல அரசு கல்லூரி மாணவர் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிபாளையம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலையும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.42 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த காலத்தில் செஞ்சேரி கிராமத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் உண்டு உறைவிட பள்ளிக்கு அரசின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்ததை நினைவுகூறும் வகையில், அப்பள்ளி மாணவ-மாணவிகள் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.