மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி:கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி

நீலகிரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி

Update: 2023-06-25 18:45 GMT

கோத்தகிரி: நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டு கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் மே 24-ந்தேதி ஊட்டியில் தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் பிரிவில் பதிவு செய்துள்ள 21 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ் ஊட்டி, கோத்தகிரியில் போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடந்த போட்டியில் ஊட்டி கென்ட்ஸ் கிரிக்கெட் அணி மற்றும் கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி பங்கேற்று விளையாடின. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் ஜூபின் 35 ரன்கள், அனூப் 30 ரன்கள் மற்றும் பிரதீஷ் 24 ரன்கள் எடுத்தனர். கென்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் ஆரோக்கியநாதன், அருள் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கென்ட்ஸ் கிரிக்கெட் அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்றது. கூடலூர் அணியின் பந்து வீச்சாளர்கள் மோகன்ராஜ், விஜயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்