வட்டார சுகாதார பேரவை கூட்டம்

நாகை அருகே வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது

Update: 2023-10-20 18:45 GMT

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் நாகை வட்டார சுகாதார பேரவை கூட்டம் மஞ்சக்கொல்லையில் நடந்தது. கூட்டத்திற்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் உத்திரவின்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் வரவேற்றார். மஞ்சக்கொல்லை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி, டாக்டர்கள் பிரியதர்ஷினி, குமாரராஜா ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் ஆகியேேர் கலந்துகொண்டு பேசினர். பொது சுகாதாரம், நோய் தடுப்புகள், கர்ப்பிணி தாய்மார்கள் ஆலோசனை, மகப்பேறு மருத்துவம், பள்ளி சிறார் மருத்துவம், மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம், புகையிலை தடுப்பு, அயோடின் பரிசோதனை, குடிநீரில் குளோரின் போன்ற எண்ணற்ற மருத்துவ சேவைகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது. இதில் மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்