தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசுகடைநடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசுகடைநடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-10-12 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசுகடைநடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், இருப்பு வைத்து இருப்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்வது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புக்குழு 9 பேருடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த குழுவின் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகள், பட்டாசுக்கடைகள் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவின் கீழ் போலீஸ், தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வார்கள். தீபாவளி வருவதால் அதிகமாக பட்டாசுகளை விற்க வேண்டும் என்று பாதுகாப்பு வழிமுறைகளை மீறக்கூடாது என்று பட்டாசு கடைகள் உரிமையாளர்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் உரிமையாளர்களிடம் வலியுறுத்தி உள்ளோம்.

நடவடிக்கை

மாவட்டத்தில் 17 உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் (எல்.இ.1) இருக்கிறது. 15 கிலோவுக்கு கீழே வெடிமருந்துகளை கையாளும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் வழங்குவார். 15 கிலோவுக்கு மேல் 500 கிலோவுக்குள் வெடி மருந்துகளை கையாளும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்னையிலுள்ள பெசோ அமைப்பின் மண்டல அலுவலகம் உரிமம் வழங்கும். 500 கிலோவுக்கு மேலே வெடிமருந்துகளை கையாளும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு நாக்பூரில் இருக்கும் பெசோவின் தலைமையகம் அனுமதி வழங்கும்.

பட்டாசு கடைகள்

இந்த வகையில் மாவட்டத்தில் உள்ள 164 தீப்பெட்டி தொழிற்சாலைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த தொழிற்சாலைகளில் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி பாதுகாப்பாக கையாளுகிறார்களா? என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தி உள்ளோம். நமது மாவட்டத்தில் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து எந்தவிதமான அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்வோம். மாவட்ட அளவில் அமைக்கப்பட உள்ள ஆய்வு குழுக்களுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். அரசு விதிமுறைகளை பின்பற்றவேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசு கடை நடத்துபவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அரசு அலுவலர்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்