விவசாய சுய உதவிக்குழுவுக்கு எந்திரங்கள் வினியோகம்
தேயிலை வாரியம் சார்பில் விவசாய சுய உதவிக்குழுவுக்கு எந்திரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே சுண்டட்டி கிராமத்தில் இந்திய தேயிலை வாரியத்தின் உதவியுடன் விவசாய சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவிற்கு தேயிலை வாரியம் சார்பில், தேயிலை பை, தராசு, கவாத்து எந்திரம், மருந்து தெளிப்பான், அறுவடை எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி சுண்டட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி கலந்துகொண்டு விவசாய குழுவிற்கு எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். இதில் விவசாய சுய உதவிக்குழு தலைவர் மணி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக குழு உறுப்பினர் அன்பழகன் வரவேற்றார். முடிவில் காரி நன்றி கூறினார்.