மதுரை சிறையில் கஞ்சா வினியோகம்; 4 கைதிகள் சிக்கினர்

மதுரை மத்திய சிறையில் கஞ்சா வினிேயாகம் தொடர்பாக 4 கைதிகள் சிக்கினர். மேலும் 10 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Update: 2022-12-30 18:45 GMT

மதுரை மத்திய சிறையில் கஞ்சா வினிேயாகம் தொடர்பாக 4 கைதிகள் சிக்கினர். மேலும் 10 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கஞ்சா கடத்திய கைதி

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 1500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

நீண்ட கால சிறைவாசம் அனுபவித்து வரும் தண்டனை கைதிகளில் பலர், தோட்ட வேலை, சமையல் வேலை, பூந்தொட்டி தயாரித்தல், உணவுப்பொருட்கள் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தண்டனை கைதிகளில் ஒருவரான பாபு, பல மாதங்களாக தோட்ட வேலையில் ஈடுபட்டு வந்தார். அவர் சமீப நாட்களாக வெளி நபர்களிடமிருந்து கஞ்சாவை பெற்று மற்ற கைதிகளுக்கு கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் சிறை போலீசார், பாபுவை தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து சிறைக்குள் கஞ்சா கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு

மேலும், தண்டனை கைதி குமரன், விசாரணை கைதி பிரகாஷ், முத்துராஜா ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறை போலீசார், அவர்கள் அனைவரையும் சோதனை செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 65 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மத்திய சிறை ஜெயிலர் பாலகிருஷ்ணன், கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கஞ்சா கடத்தியதாக மேற்கண்ட கைதிகள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 10 கைதிகளிடம் விசாரணை நடத்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்