கம்மாபுரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்
கம்மாபுரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.;
கம்மாபுரம்,
வேளாண் இடுபொருட்கள்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கும் விழா கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம் இருப்பு கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி தலைமை தாங்கினார். தாசில்தார் தனபதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாபதி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இருப்பு வி.எஸ்.முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அட்மா குழு தலைவர் ராயர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், தென்னை மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் தேவேந்திரன், பழனிசாமி, வேல்முருகன், சீனிவாசன், நமச்சிவாயம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொத்தங்குடி
பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பொறுப்பு குழு உறுப்பினர் சுதா இளவரசு, வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் பொன்னுசாமி, சேர மன்னன், கவுன்சிலர் தவமணி முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலம்பாடி
இதேபோல் புவனகிரி ஒன்றியம் ஆலம்பாடி ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண் துறை அலுவலர் அமுதா தலைமை தாங்கினார். உதவி அலுவலர்கள் வீரமணி, கல்பனா, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவனகிரி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் தென்னைமரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கோமதிசேகர், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் அரவிந்தன் மற்றும் முனுசாமி, மகாலிங்கம், ராமச்சந்திரன், வீரமணி, சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரதராஜன் நன்றி கூறினார். தொடர்ந்து லால்புரம், கிருஷ்ணாபுரம் ஊராட்சிகளிலும் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.