மோசூர் கிராமத்தில் 600 தென்னங்கன்றுகள் வினியோகம்
மோசூர் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் 600தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது.;
மோசூர் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் 600 தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது.
திமிரியை அடுத்த மோசூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் இருதயராஜ் வரவேற்றார், இதில் திமிரி ஒன்றிய குழு துணை தலைவர் ரமேஷ் தலைமை தாங்கி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் சார்பில் ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் வழங்கினார்.
விழாவில் உதவி விதை அலுவலர் ஜெய்சங்கர், உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரபாகரன், சங்கர் பயிர் அறுவடை சோதனையாளர் யோகவர்மன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.