நிலத்தில் ஆடு மேய்ந்ததால் தகராறு; தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு

நிலத்தில் ஆடு மேய்ந்த தகராறில் தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-21 19:18 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உல்லியக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் தனவேல்(வயது 60). அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி தர்மலிங்கத்தின் மனைவி ராசக்கிளி(57). இவர்களது குடும்பத்தினரிடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராசக்கிளியின் ஆடுகள் தனவேலின் விவசாய நிலத்தில் மேய்ந்ததாகவும், இதுகுறித்து ராசக்கிளியிடம் தனவேல் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் தனவேல் மற்றும் ராசக்கிளி ஆகியோர் அளித்த புகாரின்பேரில் தனவேல் மற்றும் ராசக்கிளி, தர்மலிங்கம் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்