ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு தடை கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Update: 2022-08-10 15:52 GMT

மதுரை,

நெல்லையைச் சேர்ந்த முத்துராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஆலைக்கு இடம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அதே நேரம் சிப்காட் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட நிலத்தை இன்னும் முழுமையாக ரத்து செய்யவில்லை. சிப்காட் வழங்கிய நிலத்தை மற்றவர்களுக்கு மாற்றம் செய்ய முறையான அனுமதி எதுவும் பெறவில்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல எனக் கூறி தள்ளுபடி செய்தனர். மனுதாரர் சம்பந்தப்பட்ட இடத்தில் முறையிட்டு உரிய பரிகாரம் தேடிக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்