101 வண்ணத்து பூச்சி வகைகள் கண்டுபிடிப்பு

வெள்ளலூர் குளக்கரையில் 101 வண்ணத்து பூச்சி வகைகள் தெரியவந்தது.

Update: 2022-09-27 18:45 GMT

கோவை வெள்ளலூர் குளக்கரையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றம்தன்னார்வ அமைப்பினர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த குளக் கரையில் மூலிகை செடிகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள், மூங்கில் வனம், பூச்செடிகள், வண்ணத்து பூச்சிகளை ஈர்க்கும் பல்வேறு வகையான செடிகள் உள்ளிட்டவற்றை நட்டு பராமரித்தனர்.

இந்த நிலையில் இந்த பகுதியில் வண்ணத்து பூச்சிகள், பல்வேறு வகையான பூச்சி இனங்கள் வந்துள்ளன. இதனால் அந்த பகுதி பல்லுயிர் பூங்காவாக திகழ்கிறது.

இதையடுத்து இங்கு காணப்படும் வண்ணத்து பூச்சிகளை ஆவணப்படுத்தும் நடவடிக்கை நடைபெற்றது.

இந்த பணியில் நாகராஜ், பாவேந்தன், சதீஸ்குமார், ஸ்ரவன்குமார், ரமணசரண், நிஷாந்த், தெய்வப்பிரகாசம், மகேஷ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். இதில் 101 வகையான வண்ணத்து பூச்சிகள் இங்கு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த மணிகண்டன், பாவேந்தன் கூறுகையில்,

இந்திய அளவில் 1,350 வகையான வண்ணத்து பூச்சிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 328 வகையான வண்ணத்து பூச்சிகள் காணப்படுகிறது.

வெள்ளலூர் குளக்கரையில் உள்ள வண்ணத்து பூச்சிகளை ஆவணப்படுத்தும் பணி கடந்த 1 ஆண்டாக நடைபெற்றது.

இதில் வெள்ளலூர் குளத்தில் 101 வகையான வண்ணத்து பூச்சிகள் இருப்பது தெரியவந்தது. இது தமிழகத்தில் உள்ள மொத்த வண்ணத்து பூச்சிகளின் 25 சதவீதமாககும்.

இதனால் வண்ணத்து பூச்சிகளின் ஹாட் ஸ்பாட் ஆக வெள்ளலூர் குளம் விளங்குகிறது.

தேனீக்களை போன்றே வண்ணத்து பூச்சிகளும் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவுகின்றன. இதுதவிர உணவு சங்கிலியில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

ஆனால் இது பொதுமக்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

வெள்ளலூர் குளத்தில் சதர்ன் போர்டு விங், புளு மார்மன், சாக்லேட் அலட்பாட்ராஸ், கருப்பு ராஜா, டெயில்டு பாம்பிளை, பேம்பூ ட்ரீபிரவுன், மெடஸ் பிரவுன், காமன் லெபோர்டு, பீகாக் பேன்சி, கிரேபேன்சி, இந்தியன் சன்பீம், லார்ஜ் ஓக்புளு, ரெட்ஸ்பாட், பனானா ஸ்கிப்பர், ஆப்ரிக்கன் மார்பிள்ட் ஸ்கிப்பர் உள்ளிட்ட வண்ணத்து பூச்சி இனங்கள் அதிகமாக உள்ளன என்றனர்.

மேலும் செய்திகள்