ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
ஆனைமலை ஆற்றில பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.;
ஆனைமலை
ஆனைமலை ஆற்றில பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.
பேரிடர் மீட்பு ஒத்திகை
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள ஆறுகளில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது. இதேபோல் ஆனைமலை தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து கொண்டிருப்பதால் ஆனைமலை ஆற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒத்திகையை மேற்கொண்டது.
இதில் தீயணைப்பு அலுவலர் பிரபாகரன் கொண்ட குழுவின் 10 பேர் மற்றும் ராணுவ மேஜர் மித் உள்பட 12 வீரர்கள் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனை மருத்துவர் கோவிந்தராஜ் மற்றும் கவுதம், பெரிய போது மருத்துவர் ரஞ்சித் ஷர்மிளா ஆனந்த் கொண்ட குழுவினர்கள் மூலம் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கால்நடைகளை மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
முதலுதவி
இதேபோல் ஆற்றில் குளிக்க மற்றும் துணி துவைக்க வரும் பொதுமக்கள் எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தால் அவர்களை லாவகமாக எப்படி மீட்பது மற்றும் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களை எப்படி மீட்பது, அவர்களுக்கு எப்படி முதல் உதவி செய்வது போன்ற ஒத்திகை பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ், தாசில்தார் பானுமதி, வருவாய் ஆய்வாளர் கற்பகவள்ளி, ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார், செயல் அலுவலர் உமாராணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.