மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் சணல் பைகள் தயாரிப்பு குறித்து நேரடி பயிற்சி
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் சணல் பைகள் தயாரிப்பு குறித்து சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி
இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக தொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்க அனைத்து உதவிகளும் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறது. அதன்படி, வரும் வாரத்தில் 3 நாட்கள் நேரடி பயிற்சியாக சென்னையில் சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இது தேர்ந்தெடுத்த பயிற்சி பெற்ற வல்லுனர்களை கொண்டு அளிக்கப்பட இருக்கிறது. பர்ஸ், பேக், பைல், தாம்பூல பைகள் ஆகியவற்றை தயாரிப்பது குறித்து, இந்த பயிற்சியில் கற்றுத்தரப்பட உள்ளது. மேலும் பயிற்சிக்கு தேவையான மெட்டீரியல்களும் வழங்கப்படும்.
முன்பதிவு அவசியம்
இதுதவிர சணல் பைகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் என்ன? அது கிடைக்கும் இடங்கள் எவை? விற்பனை செய்வதற்கான மார்க்கெட்டிங் வழிமுறைகள் அனைத்தும் கற்றுத்தரப்படும். இந்த பயிற்சியில் கலந்துகொள்ள கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். 7871702700, 9361086551 என்ற எண்களில் குறுந்தகவல் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.மேலும் சங்கத்தின் உறுப்பினராகி தங்களுடைய விவரங்களை தெரிவித்து, சங்கத்தின் மூலமாக பயிற்சிகள் மற்றும் ஸ்டால்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள விரும்பினால், ஆண்ட்ராய்டு செல்போனில் form.wewatn.com என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்