திண்டுக்கல்: வாழைப்பழம் தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்த பரிதாபம்

திண்டுக்கல் அருகே விளையாடிய போது வாழைப்பழத்தை விழுங்கிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.;

Update:2022-09-12 20:20 IST

திண்டுக்கல்,

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவருடைய மகன் சையது மவுலானா( வயது1½). இன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, அங்கிருந்த வாழைப்பழ துண்டை எடுத்து வாயில் போட்டு விழுங்கினான். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதைப்பார்த்த பெற்றோர் பதறித்துடித்தனர். பின்னர் குழந்தையை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்