தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-12 18:11 GMT

நடவடிக்கை தேவை

விருதுநகர் நகராட்சி எல்லை அருகில் ஏராளமான கிராம பகுதிகள் உள்ளன. இந்த கிராமப்புற பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் பெற முடியும். எனவே இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பதி, விருதுநகர்.

பொதுமக்கள் அவதி

சாத்தூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியால் நகரில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும் போது எழும் தூசியால் பொதுமக்கள் பல்வேறு விதமான சுவாச கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை குறைக்கின்ற வகையில் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சாத்தூர்.

பகலில் எரியும் தெருவிளக்கு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கீழப்பொட்டல்பட்டி விலக்கில் இருந்து ஊருக்குள் வரும் சாலையின் அருகில் உள்ள தெருவிளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. மேலும் தெருவிளக்கை இரவில் மட்டும் ஒளிர செய்வதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும். எனவே தெருவிளக்கை இரவில் மட்டும் ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

பஸ்நிலையம் வேண்டும்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இப்பகுதிக்கு என பஸ் நிலையம் இல்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்து கிராம மற்றும் நகர் புற பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்ராஜ், முகவூர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் பாவாலி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் பின்பகுதியில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை விரைவாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், பாவாலி.

Tags:    

மேலும் செய்திகள்