தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-13 19:43 GMT

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சி ஊராட்சியில் உள்ள மின்கம்பங்களில் இருந்து சிலர் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மின்சாரம் குறைந்த மின்அழுத்தத்தில் கிடைக்கிறது. இந்த மின்வினியோக குறைவால் இப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் திருட்டை தடுத்து சீரான மின்வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கல்குறிச்சி.

நாய்கள் தொல்லை

விருதுநகா் மாவட்டம் தம்பிப்பட்டி கிராமத்தில் நாய்களின் தொல்லை அதிகாித்து காணப்படுகிறது. நாய்கள் துரத்துவதால் இப்பகுதியில் உள்ள பெண்களும், குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனா். மேலும் சிலரை கடிக்கவும் செய்கிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து, தம்பிபட்டி.

சுகாதார சீர்கேடு

விருதுநகர் மாவட்டம் பானாங்குளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் வாருகால் வசதி கிடையாது. இதனால் கழிவுநீரானது சாலையில் செல்லும் நிலை உள்ளது. தேங்கிய கழிவுநீரால் இப்பகுதி சுகாதார சீா்கேடாகி, பொதுமக்கள் தொற்றுநோய் போன்றவற்றால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

முத்துபாண்டி, பானாங்குளம்.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் கட்டாலங்குளம்-முனியாண்டி நகர் செல்லும் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் போடப்பட்ட ஜல்லிக்கற்களானது பெயர்ந்து வெளியே தெரிகிறது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், நரிக்குடி.

வேகத்தடை வேண்டும்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு-விருதுநகர் சாலை தம்பிபட்டி ஊராட்சியில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சாலையில் வேகத்தடைகள் இல்லை. வேகமாக வரும் வாகனங்களால் சாலையை கடக்க முயலும் மாணவர்கள் சிரமப்படுகின்றனா். பெரும் அசம்பாதவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், வத்திராயிருப்பு. 

Tags:    

மேலும் செய்திகள்