'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-16 20:43 GMT

நோய் பரவும் அபாயம்

மதுரை அவனியாபுரம் செம்பூரணி பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலமுருகன், அவனியாபுரம்.

சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பி.கொண்டுரெட்டிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி பின்புறம் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்குள்ள புதருக்குள் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.குமார், பேரையூர்.

சேதமடைந்த சாலை

மதுரை தனக்கன்குளம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். விபத்து ஏற்படும் முன்னர் அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

பூபதி, தனக்கன்குளம்.

குண்டும், குழியுமான சாலை

மதுரை எஸ்.எஸ் காலனி கண்ணதாசன் தெரு சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே இந்த சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனி, மதுரை.

குடிநீர் தட்டுப்பாடு

மதுரை மாநகர் 9-வது வார்டு உத்தங்குடி பாண்டிக்கோவில் தெருவில் குடிநீர் சரிவர வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில், மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்