தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-12-11 18:40 GMT

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாலத்தின் இடுக்கில் ஆலமர கன்று வளர்ந்துள்ளது. இந்த மரக்கன்று வளர வளர பாலத்தின் வலு நாளடைவில் செயலிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலத்தில் வளரும் ஆலமரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஏராளமான நோயாளிகள் வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் வடக்கு தெருவில் உள்ள ரேஷன் கடை அருகில் இருந்த தண்ணீர் அடிபம்பு பழுதாகி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த அடிபம்பை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

சிரமப்படும் வாகன ஓட்டிகள்

பெரம்பலூர் நகரில் உள்ள பழைய பஸ் நிலையத்திலிருந்து காமராஜர் வளைவு வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்தது காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்