தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-04 17:57 GMT

அகற்றப்பட்ட வேகத்தடைகளால் விபத்து அபாயம்

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், நஞ்சை புகழூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்காக சாலையில் இருந்த வேகத்தடை கள் அகற்றப்பட்டன. ஆனால் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படாமலே உள்ளது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றன. இதனால் விபத்துக்கள் அதிகம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி பாலம் வேலை நடை பெறுவதாலும் விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்துறை முதல் தவிட்டுப்பாளையம் வரை கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த வேகத்தடைகளை உடனடியாக அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விஜயகுமார், தவிட்டுப்பாளையம், கரூர்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தார் சாலை போடப்பட்டு 15 ஆண்டுகள் ஆனதால் தார் சாலை நெடுகிலும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பொதுமக்கள் இந்த பழுதடைந்த தார் சாலை வழியாக தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்கின்றனர். அதேபோல் அங்குள்ள புகழூர் வாய்க்காலுக்கு சென்று வருகின்றனர். தார் சாலையால் தடுமாறி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பரணிதரன், முத்தனூர், கரூர். 

Tags:    

மேலும் செய்திகள்