தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-03 18:19 GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி தீரன்நகர், அருண்நகர் 4-வது தெரு செல்லும் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், தீரன்நகர், திருச்சி.

காமராஜருக்கு புதிய சிலை வைக்கப்படுமா?

திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை சாலையில் காமராஜர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையின் கைகள் உடைந்தும், பல்வேறு இடங்களில் சேதமடைந்தும், போதிய பராமரிப்பு இன்றியும் உள்ளது. கர்மவீரர் காமராஜருக்கு வருகிற 15-ந் தேதி பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சிலையை அப்புறப்படுத்திவிட்டு புதிய சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செந்தில்குமார், சுப்பிரமணியபுரம், திருச்சி.

பழுதடைந்த மின்மாற்றி

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், வேந்தம்பட்டி பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மின்மாற்றி பழுதடைந்து உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வேந்தம்பட்டி, திருச்சி.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், ரெயில் நகர் நெடுஞ்செழியன் தெரு 3-வது மின்கம்பத்தின் அடிப்பகுதி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சவுக்கத், ரெயில் நகர், திருச்சி. 

Tags:    

மேலும் செய்திகள்