திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

அவளுரில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.;

Update:2023-04-18 00:19 IST

காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அவளுர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை மாத அக்னி வசந்த விழா 21 நாட்கள் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று முன்தினம் தீமிதி விழா நடைபெற்றது. பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் 21 நாட்களாக விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செய்தனர். தொடர்ந்து இரவு அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அனைத்து வீதிகளிலும் ஊர்வலம் வந்தது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்