சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-25 18:45 GMT

திருக்கடையூர்:

ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே ஆக்கூரில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 17 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சீதளாதேவி மாரியம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு மாலை 4 மணி அளவில் இரட்டை குளகரையிலிருந்து பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

வீதி உலா

தொடர்ந்து சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இரவு 7.30 மணி அளவில் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இரவில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் கிராமத்தினர் செய்தனர். திருவிழாவை முன்னிட்டுஅசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்