மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருமருகல் அருகே மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
திருமருகல் அருகே குருவாடி கிராமத்தில் அகிலாண்டதேவி மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.