தி.மு.க. நிகழ்ச்சிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்-மாவட்ட செயலாளர் அறிக்கை

தி.மு.க. நிகழ்ச்சிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-08 19:00 GMT

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

தி.மு.க. நிகழ்ச்சிகளிேலா, கழக நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளிலோ இனி டிஜிட்டல் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதேபோன்று உயர் நீதிமன்ற விசாரணையிலும் தி.மு.க. கூட்டங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ பேனர்கள் வைப்பதில்லை என்று உறுதி கொடுத்திருக்கிறார்கள்.

பேனரால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆகையால் கழக நிர்வாகிகள் பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கழக நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்