விபத்தில் வாலிபர் சாவு

Update: 2023-04-12 19:00 GMT

ஓசூர்:

சூளகிரி அருகே உள்ள செம்பரசனப்பள்ளியை சேரந்தவர் சீனிவாசன் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கடந்த 10-ந் தேதி ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் பத்தலப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்