தனியார் பள்ளி பஸ்சில் இருந்து தவறிவிழுந்த கிளீனர் பலி
தனியார் பள்ளி பஸ்சில் இருந்து தவறிவிழுந்த கிளீனர் பலி
மத்திகிரி:
தேன்கனிக்கோட்டை மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 57). இவர் மத்திகிரி தனியார் பள்ளியில் பஸ் கிளீனராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவர் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்த போது, படியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.