கந்தம்பாளையம் அருகே விபத்தில் தனியார் கல்லூரி அலுவலக பணியாளர் பலி
கந்தம்பாளையம் அருகே விபத்தில் தனியார் கல்லூரி அலுவலக பணியாளர் பலி
கந்தம்பாளையம்:
திருச்செங்கோடு மண்டகபாளையத்தை சேர்ந்த பழனிவேலு மகன் ரவிச்சந்திரன் (வயது 39). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கந்தம்பாளையம் அருகே உள்ள பெருங்குறிச்சி குண்ணங்கல்காடு அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பெருங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கெஜலட்சுமி நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.