"மகளிர் முன்னேற்றத்திற்கு தோழி விடுதி வலு சேர்க்கும்" - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவீட்

மகளிர் முன்னேற்றத்திற்கு தோழி விடுதி வலு சேர்க்கும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-30 07:38 GMT

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்களுக்கு உதவும் விதமாக தமிழ்நாடு அரசானது மகளிர் தங்கும் விடுதிகளை தொடங்கியுள்ளது. தோழி விடுதி என்று அழைக்கப்படும் இவ்விடுதி பெண்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தோழி விடுதி குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"தோழி விடுதிகள் - இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி!. மகளிர்க்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது!. டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், நமது திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும்!" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்