குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

பாளையங்கோட்டையில் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2022-08-23 20:09 GMT

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் நலச்சங்கம் சார்பில் பாளையங்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசால் உத்தரவிடப்பட்ட அகவிலைப்படி உயர்வை கடந்த 7 மாத நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். வாரியத்தில் மூப்பு அடிப்படையில் ஓய்வு பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் பணி ஓய்வு பெறும் நாளில் அனைத்து பணப்பயன்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சோழராஜன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தங்கராஜ், துணைத்தலைவர் முருகன், பொருளாளர் ஸ்ரீகுமரன், செயற்குழு உறுப்பினர்கள் மணவாளன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் முத்துகிருஷ்ணன், பெருமாள், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணை செயலாளர் வண்ணமுத்து, செயலாளர் குமரேசன், செயற்குழு நிர்வாகிகள் ஆதிமூலம், ஆதம் இலியாஸ், சி.ஐ.டி.யு. ஸ்டீபன், அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கோமதிநாயகம், உதவி தலைவர் மேரிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்