சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு சான்றிதழ்

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Update: 2023-02-01 18:38 GMT

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று திருச்சி வந்திருந்த நிலையில், அவர் திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் அபராதத்துடன் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தருவதற்கு சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டா் கலா மற்றும் முதல் நிலை பெண் போலீஸ் பிரியா ஆகியோரையும், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் பல ஆண்டுகளாக நிலவி வந்த இந்து-முஸ்லிம்களுக்கு இடையில் இருந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சிறப்பாக பணியாற்றிய வி.களத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரையும், இதுவரை 28 நபர்களுக்கு ரத்ததானம் செய்தும், தன்னுடன் பணிபுரியும் போலீசாரில் 100 நபர்களுக்கு மேல் ரத்த தானம் செய்ய முக்கிய காரணமாக இருந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோரின் பணிகளை பாராட்டியும், அவர்களை மென்மேலும் சிறப்பாக பணிபுரிய போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார். அப்போது திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்