ஆனைமலையில் குடற்புழு நீக்க முகாம்
ஆனைமலையில் குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.
ஆனைமலை
தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு குடற்புழு தொற்று ஒரு காரணமாக உள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு தேசிய குடற்புழு நீக்க முகாம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி ஆனைமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடற்புழுநீக்கத்திற்கான மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு இலவசமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க அரசால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதில் சுகாதார நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செல்லத்துரை மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.