காணைதுர்கை அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
காணை துர்கை அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் நடைபெற்றது.
காணை,
விழுப்புரம் அருகே காணை அம்மன் துர்க்கை கோவிலில் சித்ராபவுர்ணமி விழா நடைபெற்றது. இதையொட்டி துர்கை அம்மனுக்கும், பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முன்தாக காணை கிராமத்திலிருந்து துர்க்கை அம்மனுக்கு 108 பால்குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் காணை, கோனூர், தெளி, காங்கியனுார், பெரும்பாக்கம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்ளுக்கு அண்ணதானம் வழங்க பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை காணை கிராம மக்கள் செய்திருந்தனர்.