புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் திரண்ட பக்தர்கள்
புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் திரண்ட பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் விழா தொடங்கியது. புரட்டாசி மாதம் நேற்று பிறந்ததையொட்டி, வார சனிக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தையொட்டி, அதிகாலை, 6 மணி முதல் 12 மணி வரை பிற்பகல் 4 முதல் 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
நேற்று புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் கோவிலுக்கு திரண்டு வந்த பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். இதனால் கோவில் சார்பில் பக்தர்கள் சாமி தரிசன செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது