சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-09-25 20:03 GMT

வத்திராயிருப்பு, 

மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

மகாளய அமாவாசை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற தாணிப்பாறை வனத்துறை கேட்டிற்கு முன்பு குவிந்தனர். 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர். பக்தர்களின் வருகை நேரம் ஆக ஆக அதிகமானதால் வனத்துறை கேட்டின் முன்பு நின்றிருந்த பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலில் சிக்கினர். சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிக்கு மதியம் 12 மணி அளவில் பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சுவாமி மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி பக்தர்களுக்கு அருள்பளித்தார்கள்.

போக்குவரத்து நெரிசல்

பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லாததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

தாணிப்பாறை அடிவார பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஒரு சில போலீசார் மட்டுமே இருந்தனர். அடிவாரப் பகுதிகளில் முன் ஏற்பாடுகள் சரிவர இல்லை எனவும், பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் இல்லை எனவும் பக்தர்கள் குற்றம் சாட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்