தேவிப்பட்டணம் பஞ்சாயத்து கூட்டம்

தேவிப்பட்டணம் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது

Update: 2022-10-21 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிப்பட்டணம் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவரும், வழக்கறிஞருமான ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாடசாமி, செயலர் (பொறுப்பு) முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தேவிப்பட்டணம் ஊராட்சி பகுதி மக்களுக்கு கிடைத்திடவும், குடிநீர் குழாய்களில் உள்ள பழுதுகளை நீக்கிடவும், புதிதாக ஜம்ப் அமைத்து குடிநீர் கிடைத்திட வழிவகை செய்திடவும், தேவிப்பட்டணத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீர் சப்ளை பணியாளர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் ராமராஜ், ஆர்.தங்கராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்