வெம்பக்கோட்டை பகுதியில் வளர்ச்சி பணிகள்

வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-10-17 20:22 GMT

வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி நேரில் ஆய்வு செய்தார். மடத்துபட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை, ஊருணி கரையை பலப்படுத்தும் பணி, எதிர்க்கோட்டையில் அங்கன்வாடி மையம் மற்றும் கிராமிய மருத்துவ மைய கட்டிடப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். குண்டாயிருப்பில் கிராமிய சாலை மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை, ஆலங்குளத்தில் கிராமிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகள், காக்கிவாடான்பட்டியில் பேவர்பிளாக் சாலை பணிகளையும் ஆய்வு செய்தார்.

இ.டி ரெட்டியபட்டியில் பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டார். எம். துரைசாமிபுரத்தில் கிராமிய சாலை மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை, நதிக்குடியில் பேவர்பிளாக் சாலை மற்றும் சிமெண்டு ரோடு, கொங்கன்குளத்தில் கிராமிய மருத்துவ மைய கட்டிடம், மற்றும் பாரத பிரதமர் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டு பயனாளியிடம் கட்டிட பணிகள் குறித்து கேட்டறிந்தார். வெம்பக்கோட்டை ஆணையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ், ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்