சுற்றுலா வளாகத்தில் வளர்ச்சி பணிகள்

பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.;

Update: 2023-10-21 19:00 GMT

திருவெண்காடு;

பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

சிலப்பதிகார கலைக்கூடம்

வரலாற்று சிறப்புமிக்க பூம்புகாரில் பண்டைய சிலப்பதிகாரத்தை நினைவு கூறும் வகையில், கடந்த 1972-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் சிலப்பதிகார கலைக்கூடம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின, சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி முதற்கட்டமாக ரூ.24 கோடியில் சுற்று சுவர், கலைநயமிக்க தோரண வாயில்கள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆய்வு

இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை இயக்குனருமான அமுதவல்லி இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து செய்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன், ஊராட்சி தலைவர் சசிகுமார், பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்