வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தமிழக தொழில்துறை ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.;
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தமிழக தொழில்துறை ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
ஆய்வு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர், தமிழக தொழில்துறை ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண்துறை, ஊரக வளர்ச்சிதுறை, குடிநீர் வினியோகம், பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை, பள்ளிகளில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரசின் திட்டங்கள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தப்படுவது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் பேசுகையில்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சிரமமின்றி கிடைக்கும் வகையில் அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி கலெக்டர் சிவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.