தேவர் குரு பூஜை: 13 ட்ரோன் கேமராக்கள், வாடகை வண்டிகளுக்கு அனுமதி ரத்து - கடும் கட்டுப்பாடுகள்

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வருகிற 30-ந் தேதி மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Update: 2022-10-26 16:42 GMT

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வருகிற 30-ந் தேதி மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், தேவர் குரு பூஜை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கமுதி தனி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை முன்னிலையில், ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட 5 டிஐஜிக்கள், 28 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதன்பின்னர் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேவர் குருபூஜை விழாவில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். போலீஸார் அக்.27 முதல் 30-ம் தேதி வரை பணியில் ஈடுபடுவர். தடை செய்யப்பட்ட பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுபவர்கள், வாகனங்களை, கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கபடும். பசும்பொன்னில் கண்காணிப்பு பணியில் 13 ட்ரோன் கேமராக்கள், 92 நிரந்தரக் கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்